காச நோயிற்கு மருந்தாகும் கற்பூரவல்லி இலை- இதில் பஜ்ஜி செய்வது எப்படி?
கற்பூரவல்லி இலையை “ஓமவல்லி” என்றும் அழைப்பார்கள்.
இந்த மூலிகைச் செடி பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய கை மருத்துவத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது. மருத்துவத்துடன் மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் செரிமான பிரச்சினையுள்ளவர்கள் கற்பூரவல்லி இலை சாப்பிடலாம்.
இது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சனைகளை கட்டுபடுத்தும். அத்துடன் காச நோயாளர்கள் இதனை மருந்தாக எடுத்து கொள்கிறார்கள். ஏனெனின் கற்பூரவல்லி இலை காசநோயிற்கான பாக்ரீயாவை எதிர்த்து போராடுகிறது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டுள்ள கற்பூரவல்லி இலையில் பஜ்ஜி செய்து சாப்பிடலாம். இதற்கான ரெசிபியை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
தேவையான பொருட்கள்
- கற்பூரவல்லி இலைகள் – 10-15
- கடலை மாவு – 1 கப்
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
பஜ்ஜி செய்முறை
முதலில் வெளியிலிருந்து கொண்டு வந்த கற்பூரவல்லி இலைகளை நன்றாக கழுவி, ஈரம் இல்லாமல் துடைக்கவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைக்கவும்.
இது ஒரு புறம் இருக்கையில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு கற்பூரவல்லி இலையையும் மாவு கலவையில் போட்டு அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
பொரித்த பஜ்ஜிகளை பேப்பர் டவலில் வைத்து பரிமாறினால் சுவையான கற்பூரவல்லி இலை பஜ்ஜி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |