வீட்டில் தக்காளி இருக்கா? அப்போ கர்நாடாகா ஷ்பெஷல் தக்காளி பாத் செய்ங்க
உணவை வித்தியாசமாக செய்வது மிகவும் முக்கியமாகும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சிறியவர்கள் என எல்லோரும் விரும்பி சாப்பிடும் வகையில் உணவை செய்வது முக்கியமாகும்.
இதுவரை த்ககாளியில் பல உணவுகள் சாப்பிட்டிருப்போம். அனால் இப்போது வீட்டில் இருக்கும் தக்காளியை வைத்து கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் செய்ய முடியும்.
தக்காளி பாத் பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.
தேவையான பொருட்கள்
- அரிசி – ஒரு கப் (அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)
- நெய் – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- பிரியாணி இலை – 1
- பட்டை – 1
- கிராம்பு – 2
- ஸ்டார் சோம்பு – 1
- ஏலக்காய் – 1
- பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
- தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பச்சை பட்டாணி – ஒரு கப்
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி , பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
- கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- ஊறவைத்து அரைக்க தேவையான பொருட்கள்
- தக்காளி – 2
- பூண்டு – 4 பல்
- வர மிளகாய் – 2 (இதை மட்டும் சூடான தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்துவிடவேண்டும். பின்னர் மிக்ஸியில் சேர்த்து நல்ல மையாக அரைத்துக்கொள்ளவேண்டும்)
- மல்லித்தழை – சிறிது
செய்யும் முறை
முதலில் பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவேண்டும்.
அடுத்து பெரிய வெங்காயம் சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். இதனுடன் பச்சை பட்டாணியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து தக்காளி சேர்த்து அது வதங்கியவுடன், கறிவேப்பிலை இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து அரைத்த விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
வதக்கிய இநை்த அனைத்து பொருட்களும் பச்சை வாசனை போனவுடன், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து நன்றாக கிளறி, இரண்டே கால் கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
இதன் பின்னர் சமைத்த தக்காளி பாத்தில் மல்லித்தழை தூவி இறக்க வேண்டும். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |