ஐபோன் மொபைலை வைத்து கேக் வெட்டிய எம்எல்ஏ மகன்! குவியும் கண்டனம்; வைரல் வீடியோ
கர்நாடக மாநில பா.ஜ. எம்.எல்.ஏவின் மகன் ஐபோனை வைத்து பிறந்தநாள் கேக் வெட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் கனகாகிரி தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் பசவராஜ், இவரது மகன் சுரேஷ் சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடினர்.
இதையடுத்து, பல்லாரி மாவட்டத்தின் ஹோஸ்பேட்டை பகுதியில் தன் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய போது, கேக் வெட்டும் கத்திக்கு பதிலாக தன் செல்போனை பயன்படுத்தி கேக்கை வெட்டியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர் தன்னிடம இருக்கும் பணத்தை வெளிகாட்டும் விதமாக இதை அவர் செய்துள்ளதாக கூறி சர்ச்சை கிளப்பி வருகின்றனர்.
A Karnataka BJP MLA’s son has stirred a controversy by cutting his birthday cake(s) using his iPhone pic.twitter.com/zht6HhD12X
— Soumya Chatterjee (@Csoumya21) September 3, 2021