நன்றாக படிக்கிறான் என மாணவனை விஷம் வைத்து கொன்ற சக மாணவியின் தாய்! அதிர்ச்சி சம்பவம்;
பள்ளி மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை சக மாணவியின் தாய் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். ரேஷன் கடையில் வேலை செய்யும் இவருக்கு, பால மணிகண்டன்(13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சிறுவன் மயக்கம்
இதன் பின்னர், பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி கலந்துகொண்டு சிறுவன் வீட்டிற்கு வந்த பின் தனது தாயிடம், என்ன குளிர்பானம் கொடுத்தீங்க? அதை குடித்ததில் இருந்து எனக்கு மயக்கமாக வருகிறது என பாலமணிகண்டன் கூறியுள்ளான்.
இதற்கு தாய் அதிர்ச்சியடைந்து நான் கொடுக்கவில்லை என கூற, சிறிது நேரத்தில் சிறுவன் பாலமணிகண்டன் வாந்தி எடுத்து மயங்கியுள்ளான். பின், அவசரமாக மாலதி தனது மகனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்தபோது மாணவன் பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் விசாரணையில், குளிர்பானத்தை தாய் கொடுத்ததாக பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது.

குளிர்பானத்தில் விஷம்
இதனால் அதிர்ச்சி அடைந்த, மாலதி தனது கணவர் ராஜேந்திரனுடன் பள்ளிக்கு சென்று பள்ளி காவலாளியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து விசாரித்ததில் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பள்ளியில் பாலமணிகண்டன் வகுப்பில் பயிலும் சக மாணவி ஒருவரின் தாயார், காவலாளி தேவதாசிடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.
தாய் புகார்
இதன்பின், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் தனது மகன் பாலமணிகண்டன் கல்வி மற்றும் இதர கலைகளில் விளங்கி வந்துள்ளார்.
இதை பொறுக்க முடியாமல் மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கலந்து அதை காவலாளி மூலம் தனது மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தார்.

மாணவன் உயிரிழப்பு
இந்த நிலையில், விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
இதனால் போலீசார் மாணவியின் தாயாரை கைது செய்துள்ளது. மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பாகியுள்ளது.