கமல் தாலி எடுத்து கொடுத்து நடந்த திருமணம்.... சினேகனின் பிரிவை தாங்காத கன்னிகா! காட்டுத் தீயாய் பரவும் பதிவு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன், கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்றது.
இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தாலி எடுத்து கொடுத்து அவர் தலைமையில் திருமணம் நடத்தி வைத்திருந்தார்.

தற்போது சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றார். திருமணமான 6 மாதத்தில் முதல் முறை மனைவியை பிரிந்திருக்கின்றார். இது குறித்து அவரின் மனைவி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், ஏப்ரல் மாதத்தில் படத்தில் இடம்பெற்ற ‘பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை’ என்ற பாடலை போட்டிருக்கிறார்.
திருமணமாகி ஆறு மாதத்தில் கணவனைப் பிரிந்த சோகத்தில் கன்னிகா பதிவிட்டு இருக்கிறார்.
இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், கன்னிகா பதிவிட்டு இருக்கும் ஏப்ரல் மாதத்தில் பொய் சொல்ல இந்த மனசுக்கு என்ற பாடல் சினேகன் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.