என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது! சினேகனுடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படத்தினை லீக் செய்த கன்னிகா
பிரபல கவிஞர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் உலகநாயகன் கமலஹாசன் தலைமையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது 7 வருடத்திற்கு முன், காதலர் சினேகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திடீர் என சினேகனின் திருமண பேச்சு அடிபட்டு வந்த நிலையில், இவரது காதல் விவகாரமும் வெளியே வந்தது.
சினேகனும், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகையுமான கன்னிகாவும், சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், ஜூலை 29 ஆம் தேதி திருமணமும் பிரமாண்டமாக நடந்தது.
என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது?♀️?♂️
— கன்னிகா ரவி @Kannika Ravi (@KannikaRavi) July 31, 2021
முதல் புகைப்படம்? 2014?
வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க? கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்?
அன்புடன்
கன்னிகா சினேகன் #kannikaravi pic.twitter.com/esGBc2wAls
திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், கன்னிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சினேகனுடன் முதல் முதலாக கடந்த 7 வருடங்களுக்கு முன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது... வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிகள்.
கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம். அன்புடன் கன்னிகா சினேகன் என பதிவிட்டுள்ளார்". இவரது இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் நெட்டிசன்கள் பலர் தங்களுடைய திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.