புடவையில் புயல் போல சுழன்று சுழன்று சிலம்பம் சுற்றும் சினேகன் மனைவி! தமிழ் ரசிகர்களை மிரள வைத்த காட்சி
பிக் பாஸ் புகழ் சினேகனின் மனைவி கன்னிகா புயல் போல சுழன்று சுழன்று புடவையில் சிலம்பம் சுற்றி அசத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது 8 வருட காதலியான கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது.
#Snehan wife #KannikaRavi pic.twitter.com/KCNFOY6cjq
— chettyrajubhai (@chettyrajubhai) November 10, 2021
திருமணத்திற்கு பின்னர் காதல் மனைவி குறித்த பதிவுகளை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் சினேகன் மனைவி கன்னிகா சிலம்பம் சுற்றிய தமிழர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல மழையில் நடனமாடி அவர்கள் வெளியிட்ட வீடியோவும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.