பாரதி கண்ணம்மாவில் அடுத்த டிவிஸ்ட்! ஹேமா எப்படி என்னை போலவே இருக்கா... நடுநடுங்கி போன சௌந்தர்யா!
பாரதி கண்ணம்மா தற்போது புது புது திருப்பங்களுடன் விறுவிறுப்பாகி வருகின்றது.
கண்ணம்மா, தான் பெற்றெடுத்தது ஒரே ஒரு பெண் குழந்தை என்று நினைத்து அவளுக்கு லட்சுமி என பெயர்சூட்டி வளர்க்கிறாள்.
கண்ணம்மாவின் மற்ற குழந்தை பாரதி வீட்டில் வளரும் ஹேமா. ஹேமாவுக்கு தன்னுடைய உண்மையான அப்பா, அம்மா யார்? என தெரியாது.
அதே நேரத்தில் இந்த விஷயம் அனைத்தும் பாரதியின் அம்மாவான சௌந்தர்யாவுக்கு தெரியும்.
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரும் கண்ணம்மா ஹேமா என்னை போலவே இருக்கின்றாள். பாரதிக்கு திருமணம் நடக்க வில்லை என்றால் இந்த குழந்தை யாருடையது என்று கேள்வி எழுப்புகின்றார்.
இதனால், எப்படியும் இந்த உண்மை இந்த வாரம் கண்ணம்மாவுக்கு தெரிந்து விடும் என்பதால் அடுத்தடுத்து என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.