பாரதி கண்ணம்மா சீரியலில் நடந்த அதிரடி: இரட்டைக் குழந்தை ரகசியம்! உச்சக்கட்ட கோபத்தில் கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகள் பெரும் திருப்பங்கள் நிறைந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில், மக்கள் மனதில் பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றது.
தன்னுடன் படித்த சக நண்பன் மீது கொண்ட ஒரு தலை காதலால் தோழி ஒருவர் செய்யும் சூழ்ச்சியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகின்றது.
பாரதி, கண்ணம்மா, வெண்பா ஆகிய 3 கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வெண்பா செய்யும் சூழ்ச்சியால் பாரதி தனது மனைவி கண்ணம்மாவை சந்தேகப்பட்டு பிரிந்து விடுகிறார்.
இந்திலையில் வரும் வாரங்களில் என்ன நடக்கவிருக்கின்றது என்ற ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் கண்ணம்மாவிற்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் ஏற்படவே, மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கும் உண்மையினை மருத்துவர் கூறவே உச்சக்கட்ட கோபத்தில் தனது மாமியாருக்கு போன் செய்கின்றார்... இந்த ப்ரொமோ காட்சியினை அவதானித்த ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்பில் காணப்படுகின்றனர்.