கஞ்சி யாரெல்லாம் குடிக்கக்கூடாது தெரியுமா? காரணம் இதோ
கஞ்சி ஆரோக்கியம் என்று கூறப்படும் நிலையில், யாரெல்லாம் இதனை குடிக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஞ்சி பலருக்கும் ஆரோக்கியமான உணவாகவே இருக்கின்றது. ஆனால் சிலருக்கு இவை தீங்கு ஏற்படுத்துகின்றது.
ஆனால் நம்மில் பலருக்கு இந்த விடயம் தெரிவதில்லை. கஞ்சி என்றால் ஆரோக்கிய உணவு என்ற எண்ணத்திலேயே வாழ்ந்து வருகின்றோம்.
யாருக்கு கஞ்சி ஆபத்து?
உயர் ரத்த அழுத்தம், அசிடிட்டி, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கஞ்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கஞ்சி குளிர்ச்சியானது என்பதால், பகலில் குடிப்பது நல்லதாகும். மாலை வேளையில் கஞ்சி எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் சளி இருமல் பிரச்சனை இருக்கிறவர்கள் கஞ்சி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கஞ்சி ஏன் அருந்தக்கூடாது என்றால், இதில் உப்பு அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.
இதே போன்று தொண்டை அல்லது வயிற்றில் புண் இருக்கிறவர்கள் கஞ்சி குடிக்கக் கூடாது. கஞ்சி புளிப்பாக இருக்கும் என்பதால் இன்னும் புண்ணை எரிச்சலாக்குமாம்.
அசிடிட்டி, வாயு, நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கஞ்சி பிரச்சனையை ஏற்படுத்துமாம். ஏனெனில் இது நொதித்தல் மூலம் தயாராகின்றது.
கஞ்சி போன்ற நொதித்த உணவுகளில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இது சிறுநீரக நோயாளிகளுக்குத் தீங்கு விளைவிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |