யாழில் வயிற்றுப் புண்களை குணப்படுத்த இந்த உணவை தான் அடிக்கடி சாப்பிடுவார்கள்... பத்தே நிமிடம் போதும்!
யாழில் பலரும் விரும்பி உண்ணும் ஒரு ஆரோக்கியமான உணவு என்றால் அது அரிசி கஞ்சி தான்.
புழுங்கல் அரிசி சோற்றின் வடிகஞ்சியை வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் விரைவில் புண் குணமாகும்.
இந்த பழம் கஞ்சி நன்றாக ஜீரணமாகக்கூடிய சத்தான உணவாகவும் இருக்கிறது.
அதனால்தான், அரிசி கஞ்சி உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கு காய்ச்சல், வயிறு உபாதைகள் இருப்பவர்களுக்கு அளிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. அரிசி கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
யாழ் தமிழர்களின் ஸ்டைலில் அரிசி கஞ்சி செய்முறை
முக்கால் டம்ளர் அளவுக்கு சீரக சம்பா அல்லது புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ளுங்கள்.
இல்லை என்றால் சாதாரண பச்சரிசி எடுத்துக் கொண்டால், அதை மிக்சியில் போட்டு லேசாக சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளுங்கள்.
இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு பாசிப் பருப்பு சேருங்கள். அரிசி, பாசிப் பருப்பு கலவையை ஒரு வாணலியில் போட்டு மணம் வரும் வகையில் வறுத்துக்கொள்ளுங்கள். மிக அதிகமாக வறுத்துவிட வேண்டாம்.
பிறகு அரிசி – பாசிப் பருப்பு கலவையை எடுத்து, சூடு தணிய வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து இரண்டு அல்லது 3 முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
சுத்தம் செய்யப்பட்ட அரிசி- பருப்பு கலவையை ஒரு குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தேங்காய் துருவல், நான்கைந்து பல் பூண்டு ஆகியவற்றை சேருங்கள்.
அதனுடன் அரை டீ ஸ்பூன் அளவு சீரகம், சிறிது வெந்தயம், தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
அவற்றுடன் 3 கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். இதையடுத்து குக்கரை மூடி ஸ்டவ்வில் வைத்து 7 விசில் வரும் வரை வேக வையுங்கள்.
விசில் வழியாக கஞ்சி மணமணக்கும் வாசனை வரும். அரிசி கஞ்சி இப்போது நன்றாக வெந்திருக்கும். இதனுடன் நமக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி வையுங்கள்.
உங்களுக்கு தேவை என்றால், இறுதியாக அதனுடன் மிளகு தூள் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த மிளகு தூள் கஞ்சியின் மணத்தை மேலும் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அரிசி கஞ்சி செய்வது இவ்வளவுதான்.
இப்படி பதமாக பக்குவமாக சுவையாக அரிசி கஞ்சி செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அது மட்டும் இன்றி முதல் நாள் மிஞ்சிய சோற்றில் கூட நீங்கள் இதனை செய்து ருசிக்கலாம். பழங் கஞ்சி உடல் நலத்திற்கு மேலும் நன்மை தரக் கூடியது.