இலங்கையில் நடந்த வசந்த கால கொண்டாட்டம்- ட்ரெண்டிங் பாடலுக்கு ஆடிய நடனமா இது?
இலங்கை நடந்த வசந்த கால கொண்டாட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில வருடங்களாக ஏதாவது ஒரு பாடல் மாறி மாறி ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
ஒரு பாடல் ட்ரெண்ங்கில் இருக்கும் பொழுது இணையவாசிகள் அதற்கு ரீல்ஸ் செய்து பதிவேற்றுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது தாய்லாந்து மொழிப்பாடல் ஒன்று, சூரியா நடிப்பில் வெளியாகவுள்ள படத்தில் இருந்து கனிமா பாடலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இதற்கு பிரபலங்கள் மற்றும் சமூக வலைத்தளப்பயனர்கள் என அனைவரும் ரீல்ஸ் செய்து பதிவேற்றி வருகிறார்கள்.
வசந்த கால கொண்டாட்டமா இது?
இந்த நிலையில், இலங்கை- நுவரெலியா என்ற பகுதியில் வசந்த கால கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது.
அப்போது பல இளம் பெண்கள் தங்களின் கலாச்சாரத்தை வெளிபடுத்தும் வகையில் நடனமாடியிருக்கிறார்கள். அதற்கு கனிமா பாடல் போடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
கனிமா பாடலுக்கு அவர்கள் ஆடவில்லை என்றாலும் பௌத்த கலாச்சார நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.
அத்துடன் இணையவாசிகள் பலர், “இதுவும் நன்றாக தான் இருக்கிறது..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |