கணவன்- மனைவி உறவை பலப்படுத்தும் பரிகாரங்கள்- வீட்டில் செய்யலாமா?
பொதுவாக கணவன் - மனைவி உறவை ஆயிரம் காலத்து பயிர் என பலரும் கூறுவார்கள்.
உறவுகளில் அதிகம் நெருக்கம் கொண்டவர்களாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.
ஒரு குடும்பம் இந்த இரண்டு உறவில் தான் உருவாகின்றது. இது வலுவாக இல்லாமல் இருக்கும் பொழுது அடுத்து வருகின்ற அனைத்தும் பிரச்சினையாகவே போய் விடும்.
குடும்பத்தில் கணவன் - மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் குழந்தைகள், அக்கம் பக்கம், சூழல், கலாச்சாரம், பிள்ளைகள், வேலை, பணம், வீடு இப்படி அனைத்து விடயங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதில் ஏதாவது பிரச்சினைகள், சந்தேகங்கள், விரிசல் விழும் பொழுது அதனை மற்றவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்ள அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
அந்த வகையில் ஒரு வீட்டில் கணவன் -மனைவி உறவை பலப்படுத்த என்னென்ன பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வோம்.
கணவன் - மனைவி உறவை மேம்படுத்த சில டிப்ஸ்
1. உறவில் நடுவில் யார் வந்தாலும் கணவன் - மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
2. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் செல்வது அவசியம்.
3. குடும்ப சூழ்நிலையை இருவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
4. மற்றவர்களின் ஆலோசனைகளை காதுக் கொடுத்து கேட்பதை தவிர்க்கவும்.
5. பிழையோ சரியோ இருவருக்குள் பேசி முடிவெடுத்து கொள்ள வேண்டும்.
பரிகாரங்கள்
1. துளசி செடி மற்றும் தொட்டாற்சிணுங்கி செடி இவை இரண்டையும் ஒரே தொட்டியில் போட்டு வளர்க்க வேண்டும். இதனை வளர்க்க இடம் இல்லாமல் இருந்தால் துளசி வேரையும் தொட்டாசினுங்கி வேரையும் ஆயுதம் படாமல் எடுத்து மஞ்சள் தண்ணீரில் சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து வெள்ளி அல்லது செம்பு தாயத்தில் போட வேண்டும்.
இந்த தாயத்தை குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து வழிபட்டு பின்னர் கணவனும் மனைவியும் போட்டுக் கொள்ள வேண்டும்.
2. வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரையில் எந்த கடவுளை வாங்கினாலும் நாட்டுச்சர்க்கரையை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இது கணவன் - மனைவி ஒற்றுமையை மேம்படுத்த உதவியாக இருக்கின்றது.
3. வெள்ளிக்கிழமை சுக்கிர கூரையில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சுக்கிர பகவானுக்கு அகலில் நல்லெண்ணெய் விட்டு ஆறு டைமண்ட் கற்கண்டை போட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதுவும் அவர்களுக்குள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்கி ஒற்றுமையை அதிகரிக்கச் செய்யும்.
4. உங்கள் உறவு மீது மற்றவர்களால் கண் திருஷ்டி பட்டுவிட்டால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை, மாலை என இரு வேளைகளும் குங்கிலியம் மற்றும் வெண் கடுகை பயன்படுத்தி வீடு முழுவதும் தூபம் காட்ட வேண்டும்.
இந்த வழிபாடு எதிர்மறையான சக்திகளை வீட்டிலிருந்து விரட்டியடித்து மகிழ்ச்சியை நிலைநாட்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |