அஜித்துக்கு முதுகெலும்பில் எலும்பை நீக்கிய மருத்துவர்கள்? வெளியான தகவல்
நடிகர் அஜித்துக்கு சிகிச்சையின் போது ஒரு எலும்பையே எடுத்து விட்டதாக சண்டை இயக்குனர் கணல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஹீரோக்களாக நடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விடயம் இல்லை. அதற்காக பல அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். நான் சூப்பஸ்டாருடன் உணவருந்தும் போது அவர் உண்ணும் உணவுகளை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
பச்சை பட்டாணி போன்ற உணவுகளை அதுவும் அளவாக சாப்பிட்டார். அதே போல தான் சூர்யாவும் சாப்பாடு விடயத்தில் அவ்வளவு கட்டுப்பாடுகள்.
அதை விட அதிர்ச்சியான தகவல் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, தல அஜித் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பாராம். பல திரைப்படங்களில் அவர் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது காயமடைந்து பல அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.
அஜித்துக்கு முதுகெலும்பில் இருக்கும் எல்2, எல்4 டிஸ்கை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிட்டார்கள். அந்த எலும்பு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார். கோடி கோடியாய் சம்பளம் வாங்கினாலும் ஹீரோக்களுக்கும் பல ரிஸ்குகள், கஷ்டங்கள் இருப்பதாகவும் கனல் கண்ணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் விஜய், விஷால் ஆகியோர்களின் அர்ப்பணிப்பு தன்மை குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஹீரோக்கள் ரசிகர்களுக்கு ஹீரோவாகுவதற்கு முன்னர் நிஜ வாழ்விலும் நிறைய அர்ப்பணிப்புகள் செய்கின்றார்கள் என கணல் கண்ணன் தெரிவித்துள்ளார்.