குழந்தைக்கு பொல்லாத கண் திருஷ்டி யார் தெரியுமா? மறக்காம இத சேர்த்து சுத்தி போடுங்க
பொதுவாக வீடுகளில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மற்றவர்களின் கண்ணு பட்டுவிடக் கூடாது என நினைத்து திருஷ்டிக்காக சில பரிகாரங்கள் செய்வார்கள்.
இதனை கண்டுக் கொள்ளாத போது காய்ச்சல், முகத்தில் சிவப்பு நிற புள்ளிகள், குழந்தை கடுமையாக அழுது கொண்டே இருத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியிருக்கும்.
குழந்தைகளை திருஷ்டி பட வைக்கும் நபர்களில் நாம் முக்கிய இடத்தை பிடிக்கிறோம். குறிப்பிட்ட சிலரால் மாத்திரம் திருஷ்டி படாது. குழந்தையை எப்படியெல்லாம் ரசிக்கிறார்களோ அந்த சமயத்தில் திருஷ்டி படலாம்.
அந்த வகையில் குழந்தைகளுக்கு வரும் கண் திருஷ்டி வராமல் எப்படி தடுக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பரிகாரங்கள்
1. ஒரு கைபிடி அளவு கல் உப்பு எடுத்து அதனை கைகளால் மூடிக் கொண்டு குழந்தையை தாயின் மடியில் அமர வைத்து, இடமிருந்து வலமாக மூன்று முறையும், வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி போட வேண்டும்.
2. குழந்தையுடன் சேர்த்து தாயையும் சுற்றி போட வேண்டும். உப்பு கரைவது போல குழந்தைகள் மீதுள்ள கண் திருஷ்டியும் கரைந்து காணாமல் போய் விடும் என நம்பப்படுகின்றது.
3. குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு விட்டால், குழந்தை சாப்பிடாமல் அடம்பிடித்து கொண்டிருக்கும். அப்படியான நிலை வந்தால் பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி குழந்தையை சுற்றி போட வேண்டும். இப்படி செய்தால் குழந்தைகள் மீதுள்ள திருஷ்டி கழியும்.
4. கண் திருஷ்டிகள் அதிகரித்து குழந்தை கீழே விழுந்து அடிப்பட்டு விட்டால் உடனே செங்கல் அல்லது மண்ணாங்கட்டி எடுத்து, அதை குழந்தையின் தலையை மூன்று முறை சுற்றி பிறகு தூக்கி உடைக்கவும். இது குழந்தை மீதுள்ள திருஷ்டியை இறக்கும்.
5. குழந்தை சாப்பிடாமல் அடம்பிடித்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களை திட்டாமல் திருஷ்டி கழிப்பது நல்லது. அப்போது சாப்பாடு ஊட்டிய தட்டில் குழந்தையை கை கழுவ வைத்து, அதனை கொண்டு குழந்தைக்கு சுற்றிப் போட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)