சுகர் நோயை விரட்டும் கம்பு கருப்பட்டி பணியாரம்
சர்க்கரை நோயாளிக்கு சக்தியை கொட்டி கொடுக்கும் கம்பு தானியத்தில் இன்று சுவையான கருப்பட்டி பணியாரம் செய்து பார்க்கலாம்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று பலரும் பல உணவுகளை தவிர்த்து விடுவார்கள்.
குறிப்பாக இனிப்பாக இருக்கும் உணவுகளை தவிர்ப்பதால் சர்க்கரையை கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நம்புகின்றனர்.
அது உண்மை இல்லை, கம்பு தாணியத்தில் தயாரிக்கும் கருப்பட்டி பணியாரம் சுகர் நோயாளிக்கு பல நன்மைகளை வழங்குகின்றது.
இதனை எப்படி தயாரிப்பது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு - 1 கப்
- உளுந்தம் பருப்பு - 1 குழிக்கரண்டி
- வெந்தயம் - 2 ஸ்பூன்
- கருப்பட்டி - 300 கிராம்
- ஏலக்காய் - 2
- எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைத்து எழுத்து கொள்ளுங்கள்.
கருப்பட்டியை நொறுக்கிக் கொள்ளவும்.
ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். ஊறிய கம்புடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.
அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து இட்லிப் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.