மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் கமல்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்
மருத்துவ பரிசோதனைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அரசியல், சினிமா, டிவி ஷோ என படு பிசியாக இருந்து வருகிறார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன். சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னை - போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தான் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ கான்பிரன்சிங்கில் பங்கேற்று தான் நலமாக இருப்பதாக கூறினார். அந்த வாரம் கமலுக்கு பதில், நடிகை ரம்யா கிருஷ்ணன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி, விக்ரம் ஷுட்டிங் ஆகியவற்றில் கமல் பங்கேற்று வந்தார். கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 5 ஃபினாலே நிகழ்ச்சிக்கான ஷுட்டிங்கிலும் பங்கேற்றார் கமல். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவிலும் நடித்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதால், ரசிகர்கள் கவலை அடைந்தனர்.