கொரோனாவில் இருந்து மீண்ட கமல்! பிக்பாஸ் 5 நிகழ்ச்சி எப்போது வருகிறார் தெரியுமா?
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல் அமெரிக்காவில் இருந்து திரும்பிய போது தொண்டை பாதிப்பு மற்றும் இருமல் காரணமாக சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது பரிசோதனை முடிவில் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கமல் ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3-ம்தேதி வரை அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வரும் 4ம் தேதியில் இருந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள கமல் தயாராகிவிடுவார் எனவும், அதன்பின்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.