கமல்ஹாசனின் பிரம்மிக்க வைக்கும் சொத்து மதிப்பு... இத்தனை கோடிக்கு அதிபதியா?
சினிமா வாழ்க்கை தமிழ் சினிமாவில் இன்றும் அசைக்க முடியாத நாயகராக இருப்பவர் தான் கமல்ஹாசன். இவருக்கு “ உலக நாயகன்” என்ற பெயரும் இருக்கின்றது.
இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கமல்ஹாசன்
கமல்ஹாசன் தனது ஆரம்ப காலத்திலிருந்தே சினிமா துறையில் ஈடுபட்டு வருகிறார். முன்னைய காலத்திலும் சரி தற்போதும் சரி, பல்துறை நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டே இருகிறார் எனலாம்.
விக்ரம் படத்தின் மூலம் கமல்ஹாசன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து சாதனை படைத்தார்.
மேலும் இந்த திரைப்படம் அந்த ஆண்டு இந்தியாவில் மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.அத்தோடு கடந்த 7 வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார்.
கமல்ஹாசன் சொத்து மதிப்பு
இந்நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு அரசிடம் அவர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 350 கோடிக்கும் மேல் இருப்பதாக தெரியவருகின்றது.
இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்கி வருகிறாராம். கல்கி 2898 AD திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் BMW 730LD மற்றும் Lexus Lx 570 ஆகிய கார்களை வைத்துள்ளார். இந்த இரண்டு கார்களின் மதிப்பு சுமார் ரூ. 1.30 கோடி (BMW 730LD) , ரூ. 2.80 கோடி (Lexus Lx 570) ஆகும். இதுமட்டுமின்றி oyota Prado - ரூ. 96 லட்சம், Mitsubishi Pajero - ரூ. 28 லட்சம் முதல் ரூ. 33 லட்சம் வரை, Mercedes Benz E 220 - ரூ. 76 லட்சம், Range Rover Evoque -ரூ. 76 லட்சம் போன்ற கார்களையும் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |