இளையராஜாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய கமல்ஹாசன்
பிரபல பாடகியும் சிறந்த இசையமைப்பாளருமாகிய இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இலங்கையில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டதை கடைசி கட்டத்தில் அறிந்ததால் பவதாரணியின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது என கூறப்படுகின்றது.
இவரின் இழப்பு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகள் இறந்த செய்தியை கேட்ட இளையராஜா தன்னுடைய மகளின் உடலை விமானத்தில் சென்னை கொண்டு வந்தார்.
இதன் பின்னர் தேனியில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவி ஆகியோரின் சமாதிக்கு அருகில் பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பவதாரணியை அடக்கம் செய்யும் போது அவர் பாடிய பிரபல பாடலான 'மயில் போல பொண்ணு ஒண்ணு' என்ற பாடலை குடும்பத்தார் பாடி அவரை அடக்கம் செய்தனர்.
பவதாரணி
பவதாரணியை இலங்கையில் இருந்து கொண்டு வரும் போதும் அவரை அடக்கம் செய்யும் போதும் அவரின் இழப்பிற்காக ஏராளமான ரசிகர்கள், திரையுலகினர், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என எல்லோரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் பவதாரணியின் இறுதிச்சடங்கில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ள முடியவில்லை, இதனால் இவர் சென்னையில் இருக்கும் இளைராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை ஆறுதல்படுத்தினார்.
இதற்கு பின்னர் இளையராஜாவுடன் பேசிய நாளின் இரவு அவர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் எனும் படத்தில் கமல் ஹாசன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் சூட்டிங்கிற்காக இவர் அமெரிக்கா சென்றிருக்கலாம் அல்லது சொந்த காரணங்களுக்காவும் சென்றிருக்கலாம். எனினும் இது சொந்த காரணங்களுக்கான பயணமா? இல்லை சினிமாவுக்கான பயணமா? என்பது தெரியவில்லை.