பிக்பாஸில் வேற்று மொழி பிரச்சினை! கமலை ஓவர்டேக் செய்த மோகன்லால்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மலையாளத்தில் பேசின ஷெரினாவை மிகவும் வித்தியாசமான முறையில் கமல்ஹாசன் வெளியேற்றிய நிலையில், மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேற்று மொழி பேசிய போட்டியாளரை மோகன்லால் என்ன கூறினார் என்ற விடயம் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸில் மொழி பிரச்சினை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து மொழிகளிலும் நடைபெற்று வரும் நிலையில், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பார்வையாளர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மொழியினை மாற்றி பேசிவருகின்றனர்.
நேற்றைய தினத்தில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினா மற்றும் ஆயிஷா இருவரும் அடிக்கடி மலையாளத்தில் பேசி வரும் நிலையில், அவர் செய்த தவறை அழுத்தமாக சுட்டிக் காட்டும் வகையில், மலையாளத்தில் ஷெரினாவின் பெயரை எழுதி நேற்றைய தினம கமல்ஹாசன் எலிமினேட் செய்தார்.
கமலின் இந்த செயல் மற்ற போட்டியாளர்களுக்கு சிறப்பான பாடமாக இருந்துள்ளது.
ஆனால் மலையாள பிக்பாஸ் நிழக்ச்சியில் இதே பிரச்சினையை மோகன்லால் எவ்வாறு கையாண்டார் என்பது ரசிகர்களிடையே பரபரப்பாக பரவி வருகின்றது.
ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசிய ஒரு போட்டியாளரை கடுமையாக கண்டித்ததோடு, இது ஒரு மலையாள ஷோ.... மற்ற மொழியில் பேசுவதற்கு இங்கு அனுமதி இல்லை.
மலையாளம் பேசுவதாக இருந்தால் நீங்கள் உள்ளே இருக்கலாம் இல்லையென்றால் இங்கே வந்துவிடுங்கள் என்று மோகன்லால் கோபமாக கூறியுள்ளார்.
வேற்றுமொழி பேசும் பிரச்சனையை அணுகுவதில் மோகன்லாலின் கண்டிப்பான பாணியும் கமல்ஹாசனின் எதார்த்தமான பாணியும் சேர்த்து வைத்து பார்த்த நெட்டிசன்கள் இந்த சர்ச்சையை வைரலாக்கி வருகின்றனர்.