ஸ்ரீதேவியை திருமணம் செய்ய வற்புறுத்திய குடும்பம்... அப்போதே கமல் கொடுத்த அதிர்ச்சி பதில்!
தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக திகழ்ந்தவர் தான் கமல் ஹாசன். இவரும் நடிகை ஸ்ரீ தேவியும் இணைந்து கிட்டதட்ட 24 படங்கள் பக்கமாக நடித்து இருக்கின்றனர். இவர்களின் முதல் படமான மூன்று முடிச்சு. அதன் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் நடித்திருந்தார்கள்.
பின்னர், பல ஹிட் படங்களான சகலகலா வல்லவன், வறுமையின் நிறம் சிகப்பு , சின்னஞ்சிறு வயதில், சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை பல படங்களில் நடித்துள்ளார்.
இதனாலேயே அந்த காலகட்டத்தில் கமலும், ஸ்ரீதேவியும் காதலிப்பதாக பல வதந்திகள் வந்தது. ஆனால் இதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத கமலும், ஸ்ரீதேவியும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா வட்டாரத்தில் இவர்கள் மீது அதிகமாக கிசுகிசுக்கள் வர தொடங்கியது. அப்போது ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி, ஸ்ரீ தேவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கமலிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், அதற்கு கமல் அளித்த பதிலோ 13 வயதில் இருந்து ஸ்ரீதேவியுடன் பழகி வருகிறேன், ஸ்ரீதேவி என்னை சார் என்று தான் கூப்பிடுகிறார். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன்.
ஸ்ரீதேவியை என் தங்கையா? தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். பலமுறை ஸ்ரீதேவியின் அம்மா வற்புறுத்தியும் கமல் ஸ்ரீதேவியை திருமணம் செய்ய மறுத்துவிட்டாராம்.
அதன்பின்பு தான் ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
தற்போது அவர் மறைந்திருந்தாலும் அவரின் படங்கள் என்றும் அனைவரின் நினைவில் இருக்கும்.