பரிசு கேட்ட வனிதா... முத்தம் கொடுத்த கமல்ஹாசன்! தற்போது வெளியான உண்மை
வனிதா விஜயகுமார் பிக் பாஸில் கலந்து கொண்டு வெளியேறிய போது கமலிடம் கேட்ட பரிசை இன்னும் அவர் தரவில்லை என்று தற்போது கூறியுள்ளார்.
வனிதா விஜயகுமார்
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் கலந்து கொண்டு பெரும் புயலை கிளப்பினார். அப்பொழுது கமல்ஹாசனிடம் தனது பிறந்தநாளுக்கு பரிசு ஒன்று வேண்டும் என்று கேட்டுள்ளார்.
வனிதா பரிசு கேட்டதும் கமல்ஹாசன் வனிதாவை கட்டிப்பிடித்தாராம். ஆனால் தனக்கு இந்த பரிசு வேண்டாம் என்று கூறியுள்ளார். பின்பு வனிதாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார் கமல்... அதற்கு வனிதா இந்த பரிசும் எனக்கு வேண்டும் என்று கூறியதுடன், தனக்கு உங்களது படத்தில் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
சரி படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை வனிதாவிற்கு அந்த பட வாய்ப்பை கொடுக்கவில்லை என்று வனிதா தற்போது கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |