தற்கொலைக்கு துணிந்த கமல்... இப்படித்தான் என்னை மாற்றிக் கொண்டேன்: பகீர் தகவலை கிளப்பிய கமல்
அண்மைக் காலமாக தற்கொலை செய்துக் கொள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற வேளையில், கமல்ஹாசனுக்கும் இப்படியொரு எண்ணம் வந்துள்ளதாக நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன்.
இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்களை தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார். இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.
இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கியவர்.
தற்கொலை செய்ய துணிந்தேன்
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் கல்வி விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய போது தானும் 20 வயதில் செய்துக் கொள்ள நினைத்தேன் என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் பேசுகையில்,
நானும் என்னுடைய 20, 21 வயதில் தற்கொலை செய்துக் கொள்ள யோசித்தேன். கலைத்துறையில் எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தற்கொலை செய்துக் கொள்ள யோசித்தேன்.
ஆனால் தற்கொலை நம் வாழ்க்கைக்கு எப்போது ஒரு சிறந்த முடிவாக இருக்காது என்று உறுதியாக நினைத்து மனதை மாற்றினேன். மேலும், நம் வாழ்க்கையில் இருள் எப்போதுமே இருக்காது கண்டிப்பாக விடியலும் வரும் அந்த விடியலைப் பார்ப்பதற்கு நாம் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் வெற்றியடைய முடியும்.
"மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் தான், அது வரும் பொழுது வரட்டும், நீங்களே அதை தேடாதீர்கள் என்று ஊக்கம் கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |