கமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வந்த சினேகனின் திருமணம் உலகநாயகன் கமல் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கவிஞர் சினேகன் பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தங்களது திருமண செய்தியை அண்மையில் அறிவித்தார்கள்.
அதன்படி இன்று சீர்திருத்த முறையில் இவர்களது திருமணம் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
கமல் முன்னிலையில் இடம்பெற்ற திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சினேகன் மற்றும் கன்னிகா ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
நம்மவர் மக்கள் பெருந்தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ @ikamalhaasan அவர்களின் தலைமையில் கவிஞர் @KavingarSnekan @KannikaRavi திருமணம் இனிதே சிறப்புற நடைபெற்றது ? @maiamofficial pic.twitter.com/vGElGNNfKa
— ????????? ???????? (@Ramhaasan7) July 29, 2021