பத்திக்கிட்டு எரியுது பிக் பாஸ் வீடு.... கொளுத்திப் போட்ட கமல்!
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் வேலையை கமல் செய்திருப்பது சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியிருந்தது.
நாமினேஷனின் போது யாரெல்லாம் யாரையெல்லாம் என்ன சொன்னாங்க என்கிற வார்த்தைகளை பேட்ஜ்களாக கொடுத்து யார் யாரையெல்லாம் நாமினேட் செய்தார்கள் என்பதையே அவர்களை வைத்தே மறைமுகமாக சொல்ல வைத்து விட்டார் கமல்.
பிக் பாஸ் வீட்டில் தமிழில் தான் பேச வேண்டும் என்றும் ஆங்கில பிரயோகம் அதிகம் இருக்கக் கூடாது என சொல்லி விட்டு பேட்ஜ் கொடுக்கும் போது மட்டும் அனைத்துமே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டு இருந்தது ரசிகர்களை சற்றே கடுப்பாகி இருந்தது.

ஆனால், தமிழ் புரியாமல் ஆங்கிலம் மட்டுமே அதிகம் தெரிந்த போட்டியாளர்களுக்கு சுளீர் என படும் அளவுக்கு இந்த வாசகங்கள் அமையும் என்றே இதை பயன்படுத்தி கொளுத்திப் போட்டுள்ளனர்.
போலியாக இருப்பவர், வேலையே செய்யாமல் இருப்பவர், தலைக்கனம் கொண்டவர், ஒரு நிலையில் இல்லாதவர், வெறுப்பை உமிழ்பவர் போன்ற அர்த்தங்கள் கொண்ட ஆங்கில பேட்ஜ்களை ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கொடுக்க வைத்து சும்மா பிரச்சனையை ஆரம்பித்து வைத்து விட்டார் கமல்.
அக்ஷராவுக்கும் பாவனிக்கும் ஆரம்பத்தில் இருந்தே செட் ஆகவில்லை. ஒரு வேலை யார் அழகி என்பதில் இருவருக்கும் இடையே போட்டி இருக்குமோ? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அக்ஷரா பாவனிக்கு பேட்ஜ் எதையும் கொடுக்காத போதும் அவரை மறுபடியும் சீண்டும் விதமாக பாவனி அவருக்கு பேட்ஜை கொடுத்து பற்ற வைத்துள்ளார்.

பேட்ஜ் கொடுத்த விவகாரத்தில் நிரூப்புக்கும் அக்ஷராவுக்கும் இடையே கமல் முன்பாகவே வாக்குவாதம் ஆரம்பித்தது. ஏன் அப்படி சொல்ற? உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை என அக்ஷராவிடம் நிரூப் நேரடியாக கேட்க, நீ பாவனியுடன் பேசுறது பிடிக்கலைன்னா அக்ஷரா சொல்ல முடியும் சாதாரண காரணங்களை சொல்லி சமாளிக்க முயன்று சொதப்பி விட்டார்.