லீக்கான தமிழ் பிக் பாஸ் 5 இன் புரமோ ஷூட்டிங் புகைப்படம்...சிங்கம் மாதிரி ரெடியாகி வந்த கமல்! பிரமாண்டமான வீடு எப்படி இருக்கும்?
பிக் பாஸ் சீசன் 5 வேலைகள் போன நான்காவது சீசனை போலவே படு ரகசியமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சீசனில் எத்தனை பேர் கலந்து கொள்கின்றனர் என்கிற தகவல் முதல் ஏகப்பட்ட ரகசியங்கள் கசிந்து அதன் சுவாரஸ்யமே கெட்டுப் போனது.
இந்த சீசனில் பெரும்பாலும் ரகசியத்தை காப்பாற்ற பிக் பாஸ் சீசன் 5 டீம் முயற்சி செய்து வந்த நிலையில், கமல்ஹாசனின் புரமோ வீடியோ ஸ்டில்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீடு ஒவ்வொரு வருடமும் சில பல மாற்றங்களுடன் உருவாகி வரும் இந்த ஆண்டு எந்த எந்த மாற்றங்களுடன் பிக் பாஸ் வீடு உருவாகி வருகிறது என்கிற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜெயில் மாற்றப்பட்டு கண்ணாடி அறையாக மாறிய நிலையில், இந்த ஆண்டு அது மாறுமா? அல்லது அப்படியே இருக்குமா? என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

