69 வயதிலும் அதே இளமை: வெளிநாட்டில் கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படம்
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின், நடிப்பு, தயாரிப்பு பிஸியாக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாசனின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
உலக நாயகன்
கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்ந திரைப்படத்திற்கு பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.
இதில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், மறைந்த விவேக், நெடுமுடிவேணு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மொத்தமுமே நிறைவடைந்து விட்டது என்றும், அதன் அடுத்த பாகத்தை இயக்குவதில் ஷங்கர் பிஸியாக இருப்பதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கமல்ஹாசனின் புதிய படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
வைரலாகும் புகைப்படங்கள்
சினிமா, அரசியல் என மாறி மாறி படு பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், தற்போது புதிய லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அது தற்போது ரசிகர்களிடத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதில் ஸ்மார்ட்டாக இன்றைய இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் இருப்பதாக கருத்துகள் வெளியாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |