அனுமதியின்றி லிப் கிஸ் கொடுத்த கமல் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுறார்: பிரபலத்தின் மனைவி சீற்றம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதீப் நேற்றைய எபிசோடில் ரெட் கார்ட் கொடுத்து திடீரென்று வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக போட்டியாளர்களிடம் கூட சொல்ல விடாமல் அவரை கன்சன்ஷன் ரூமில் இருந்து அப்படியே வெளியேற்றி இருந்தனர். இவர் வெளியேற்றப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு கருதியே இவரை வெளியேற்றுவதாக கமல் கூறினார்.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
யுகேந்திரனின் மனைவி
இந்நிலையில் பிக் பாஸ் 7ல் கலந்துகொண்டு கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யுகேந்திரனின் மனைவி பிரதீப் வெளியேற்றப்பது குறித்து ஒரு காணொலியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் 'பெண்களின் பாதுகாப்புக்காக தான் இந்த முடிவு என கூறுகிறார் கமல். புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகாவிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு லிப் கிஸ் கொடுத்தார் கமல். அப்போது நடிகை ரேகாவிற்கு 16 வயது தான்.
கமல் நடித்த முக்கால்வாசி படங்களில் லிப்லாக் இல்லாமல் இருக்காது என்றும் தெரிவித்துள்ள யுகேந்திரனின் மனைவி, பெண்கள் உரிமைக்காக கமல் பேசுவதாக கூறுவது தனக்கு புரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
#BiggBossTamil7 #Yugendran wife direct attack on @ikamalhaasan he has no rights to talk about women safety after kissing Rekha without consent #PradeepAntony pic.twitter.com/XMS0YPrfna
— Abhishek (@funkyboss96) November 5, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |