வீடு திரும்பிய நடிகர் கமல்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாரா? அவரே வெளியிட்ட பதிவு!
நடிகர் கமல் ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கமல்.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் போனது, அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் அவர் கமல் போல் இல்லை என புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ள கமல், தான் நோய் தொற்றிலிருந்து குணமாகி பணிக்கு திரும்பியுள்ளதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். pic.twitter.com/IScdLsBjOL
— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2021