Siragadikka Aasai: முத்துவால் தோழிகளிடம் அசிங்கப்பட்ட மீனா! ஒற்றை வார்த்தையால் மாறிய தருணம்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீது கோபமாக இருந்த மீனா தனது தோழிகளிடம் அசிங்கப்பட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
நடுத்தர குடும்ப பெண் தனது மாமியார் வீட்டில் படும் கஷ்டத்தையும், ஆனால் வீட்டிற்கு நல்ல மருமகளாகவும் இருப்பதையும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளது.
மேலும் மூன்று மகன்களில் இரண்டு மகன்களை மட்டும் நன்றாக பார்க்கும் தாய் ஒரு மகனை மட்டும் ஒதுக்கி வைக்கின்றார். இதற்கான காரணம் இன்னும் சீக்ரெட்டாக இருக்கின்றது.
சமீபத்தில் அண்ணாமலை மற்றும் விஜயா இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்த நிலையில், முத்து மீனா இருவரும் அவர்களை சேர்த்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் மீனா தனது தோழிகளிடம் பந்தயம் கட்டி முத்துவால் தோற்றுப் போயுள்ளார். இத்தருணத்தில் மீனாவிற்கு முத்து புடவை ஒன்றை வாங்கி வந்துள்ளார்.
கோபமாக இருந்த மீனா முத்து கூறிய ஒற்றை வார்த்தையால் கோபம் அனைத்தையும் மறந்து வெட்கப்படுவது போன்று ப்ரொமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |