அசீமிற்கு சரியான பதிலடி கொடுத்த கமல்! வைரலாகும் வீடியோ பதிவு
பிக் பாஸில் சில தினங்களுக்கு முன் ஆயிஷா மற்றும் விக்ரமன் உடன் சண்டையிட்ட அசீமிற்கு கமல்ஹாசன் சரியான பதிலடிக் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6, எந்த சீசனிலும் இல்லாதவாறு கடும் சண்டையிடனும் கண்ணீருடனும் 20 போட்டியாளர்களுடன் ஓடிக்கொண்டிருந்தது.
மேலும் அசல் பெண்களிடம் நடந்துகொள்ளும் முறை தவறாக இருப்பதாகவும் அசீமின் வார்த்தை பிரயோகம் தவறாக இருப்பதாகவும் பல வீடியோக்கள், மீம்ஸ் அதிகமாக பகிரப்படுகிறது.
இந்நிலையில் அசீம், ஆயிஷா மற்றும் விக்ரமனிடம் மரியாதை குறைவாக பேசும் போது கடுமையான சண்டை ஏற்பட்டது. இது குறித்து கமல்ஹாசன் பேசியவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆயிஷா
அதன் படி நேற்றைய தினம் கமல் ஆயிஷாவிடம், ''நீங்கள் என்ன மரியாதையை எதிர்பார்த்தீர்களோ, அதே மரியாதையை அவருக்கு கொடுத்தீர்கள்'' என பாராட்டி பேசினார்.
மேலும், ''விக்ரம் பத்திரிகையாளர், அவருக்கு எப்படி ஒருவரைக் கோபப்படுத்தாமல் கேள்வி கேட்பது என தெரியும். ஆனால் ஆயிஷா இந்த வயதில் தெளிவாக இருப்பது பாராட்டுக்குரியது'' என்று பாராட்டி பேசியுள்ளார்.
இந்த வீடியோ அசீம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.