பிரம்மாண்டமான பிக்பாஸ் வீட்டின் மேலே ஒய்யாரமாக கமல்: வெளியான அசத்தல் ப்ரொமோ காட்சி
பிரபல ரிவியில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை தொடங்க இருக்கும் நிலையில், இன்று புதிய ப்ரொமோவை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
பல தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சி நடந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறையவில்லை. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரபலங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓரளவிற்கு பிரபலங்களின் பெயர் லீக் ஆகியுள்ளது.
அந்த வரிசையில், பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, ஷகிலா மகள் மிலா உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பிரம்மாண்டமான பிக்பாஸ் வீட்டின் மேலே ஒய்யாரமாக நிற்கும் அட்டகாசமான ப்ரொமோ வெளியாகியுள்ளது.
ஆரம்பிக்கலாமா? ? #BiggBossTamil Season 5 #GrandLaunch - நாளை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/FTwO3Xzpef
— Vijay Television (@vijaytelevision) October 2, 2021