காதலில் கண்ணனாக இருந்த கமல், கௌதமியை ஏன் பிரிந்தார் தெரியுமா?பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
நடிகர் கமல் - கௌதமி இருவரும் என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என பாலு பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.
கௌதமி
90களில் சுமாராக 125க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை கௌதமி.
இவர் ஜோடி போடாத நாயகர்களே அந்த காலத்தில் இல்லை என்று தான் கூற வேண்டும்.
காலங்கள் செல்ல செல்ல கௌதமியின் மார்க்கட் குறைய தற்போது அவர் முக்கிய கதாபாத்திரங்களில் மாத்திரம் நடித்து வருகிறார்.
இதன்படி, இவர் கதாநாயகியாக நடித்த “பாபநாசம்” திரைப்படம் ”கோலிவுட்டிற்கு ஒரு என்றியை எடுத்து கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கௌதமியும், கமலும் ஒன்றாக வாழ்கிறார்கள் என நிறைய கிசுகிசுக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக ஒரு செய்தி வெளியானது.
கமல் - கௌதமி காதல் தோல்வி
இவர்கள் ஏன் பிரிந்தார்கள்? பிரிவிற்கு மகள்கள் தான் காரணமாக? இப்படி பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. கௌதமி திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் காணாமல் போனார்.
இதிலிருந்து மீண்டு வந்த கௌதமி, யாருமே இல்லாமல் மன அழுத்தத்தில் இருந்த போது, கமல், கௌதமிக்கு பல உதவிகளை செய்தார். இதனை தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் இருந்து வந்தார்கள்.
ஒரு நாள், “என் மகளின் படிப்புக்காக,என் மகளுக்காக இந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியேறுகிறேன்.” என நாகரீகமாக பதிவொன்றை வெளியிட்டு விட்டு விலகி விட்டார்.” என பேட்டியொன்றில் பாலு கூறியுள்ளார்.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், “ கமலின் காதல் தோல்வியில் முடிய இது தான் காரணமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.