தெருவில் அனாதையாக இறந்து கிடந்த கமல் பட நடிகர்
கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த துணை நடிகர் ஒருவர் அனாதையாக தெருவில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தின் மேட்டூரை சேர்ந்தவர் மோகன் (வயது 60), தமிழில் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ள மோகனுக்கு திருமணமாகவில்லை.
கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்புவின் நண்பராக நடித்துள்ளார், இது தவிர நான் கடவுள், அதிசய மனிதர்கள் படத்திலும் நடித்துள்ளார்.
ஆனாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் வறுமை வாட்டியது, குடும்பத்தினரும் கைவிட்டதால் மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை மோகன் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார், இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மோகனின் உடன்பிறந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |