உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்... ரசிகர்களிடம் கெஞ்சிய கலா மாஸ்டர்! இலங்கையில் நடந்தது என்ன?
இலங்கை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக விளம்பர விழாவிற்கு சென்ற நிலையில், தற்போது ரசிகர்களிடம் அமைதியாக இருக்க கெஞ்சியுள்ளார்.
இலங்கையில் இசைக்கச்சேரி
நடிகை ரம்பா இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஐரோப்பாவில் வாழும் இந்திரன், யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் நோர்தன் யூனி என்ற பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தினை விளம்பரப்படுத்த ஹரிஹரன் தலைமையில் இசைக் கச்சேரி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டினை நடன கலைஞர் கலா மாஸ்டர் பார்த்துள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் யோகி பாபு, ரெடிங்டன் கிங்ஸ்லி,டிடி உள்ளிட்டோர் சென்றுள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு இலவசம் என்றும், விஐபி-களுக்கு டிக்கெட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி
குறித்த பணத்தை கல்விக்கு செலவிடுவதற்கு ரம்பாவின் கணவர் முடிவு செய்துள்ள நிலையில், நிகழ்ச்சியும் நன்றாக சென்றுள்ள தருணத்தில் விஐபி-க்கள் அமர்ந்திருந்த பகுதியில் தடுப்புகளை தாண்டி சில இளைஞர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இவர்களை பொலிசாராலும் க்டுப்படுத்த முடியவில்லையாம். அது போல் நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்ய அமைக்கப்பட்ட மேடைகளிலும் ஏராளமான ரசிகர்கள் பாதுகாப்பற்ற முறையில் நின்றுக் கொண்டனர்.
அப்போது கலா மாஸ்டர் "உங்களை பார்க்கத்தானே நாங்கள் வந்துள்ளோம். ஒத்துழைப்பு தாருங்கள். உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். எல்லாரும் கொஞ்ச நேரத்திற்கு பொறுமையாக இருங்கள் என கோரியும் அங்கிருந்தவர்கள் கேட்கவில்லை. இதனால் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டு பின்னர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |