தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி வரிசையில் அடுத்து யார் தெரியுமா? முழு சொத்து விவரங்கள் இதோ
கோலிவுட்டில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகர்களின் முழுத்தகவல் தற்போது வெளி வந்துள்ளது.
அஜித்
கோலிவுட்டில் சிறந்த நடிகராக விளங்கும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தெலுங்கில் ஒரு படம் நடிக்க இருக்கும் அஜித் அந்த படத்திற்காக பெருந்தொகை சம்பளத்தை பெற்றுள்ளார்.
நடிகர் அஜித்தின் சொத்து மதிப்பு 350 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் கடைசியாக நடித்த துணிவு படத்திற்கு வாங்கிய சம்பளம் 70 கோடி என தெரிய வந்துள்ளது. தற்போது நடிக்கும் விடாமுயற்சி பட்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 100 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.
இவர் அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகர்களில் 4 வது இடத்தில் உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
கோலிவுட் திரைப்படங்களில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஜெயிலர்.
இந்த படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 110 கோடி ரூபாய் மற்றறும் இந்த படத்தின் ஷேர்க்காக இவர் வாங்கிய தொகை 100 கோடி என தெரியவந்துள்ளது.
மொத்தமாக இந்த படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 210 கேடிகளாகும். இவர் தற்போது நடிக்கும் திரைப்படமான லால் சலாம் திரைப்படத்திற்கு 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரியவந்துள்ளது.
இவரின் சொத்து மதிப்பு 430 கோடி ரூபாய் ஆகும். நடிகர்களின் அதிக சொத்து மதிப்பு கொண்ட வரிசையில் இவர் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தளபதி விஜய்
சினிமாத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது நடிப்பில் இருந்து விலகப்போவதாக கூறி அரசியலில் களமிறகி உள்ளார்.
தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் படம் தி கோட் படம் எனும் படமாகும். இந்த படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் 120 கோடி ஆகும்.
விஜயின் சொத்து மதிப்பு மொத்தமாக 445 கோடி ரூபாயாகும். அதிக சொத்து மதிப்பு கொண்ட நடிகர் பட்டியலில் இவர் 2 வது இடத்தில் உள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசன்
சமீப காலத்தில் இருந்து படநடிப்பில் பிஸியாக இருக்கிறார் கமல் ஹாசன். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம் மாஸ் வெற்றி பெற்ற படமாகும்.
இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்தன. தற்போது இவர் பல படங்களை நடித்து கொண்டு இருக்கிறார்.இவர் ஒரு படத்திற்கு 150 கொடி சம்பளம் வாங்குகிறார் என தெரிய வந்துள்ளது.
இவரின் சொத்து மதிப்பு 450 கோடி ரூபாய் ஆகும். கோலிவுட்டின் பணக்கார நடிகரில் இவர் முதலாவது இடத்தில் உள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |