ரத்தம் வந்து 3 நாள் வலியால் துடிதுடித்த நடிகை காஜல்....பிரசவ அறையில் நடந்தது என்ன?
நடிகை காஜல் அகர்வாலுக்கு அண்மையில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் காஜல் தனது மகனின் வருகையை அறிவித்து தனது பிரசவ அனுபவத்தை குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது,
பிரபல இயக்குனருடன் சூர்யாவின் மகன் தேவ்! 11 வயதிலேயே படத்தில் நடிக்கிறாரா?
விவரிக்க முடியாத உணர்வு
என் குழந்தை நீலை இந்த உலகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீல் பிறந்த அந்த சில நொடி என் மார்பில் அவனை பிடித்துக் கொண்டதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு.
பயங்கர சந்தோசமாக இருந்தேன். அந்த நேரத்தில் தான் காதல் என்பதை புரிந்து கொண்டேன். அதோடு ரெஸ்பான்சிபிலிட்டியையும் புரிந்து கொண்டேன். குழந்தை பிறப்பு நிச்சயமாக எளிதானது அல்ல.
உண்மையில் பிரசவத்திற்குப் பிறகு நான் நிச்சயமாக அழகாக உணர்கிறேன். இந்த பிறப்பு அனுபவம் எங்கேயும் கிடைக்காது.
சனி பெயர்ச்சி 2022: 4 ராசிகளுக்கு தேடி வரும் ராஜயோகம்
மூன்று நாட்கள் தூங்கவில்லை
இந்த சந்தோஷம் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் தூங்கவில்லை, ரத்தம் வந்தது, பயங்கர சிரமப்பட்டேன். ஆனால், என் மகனை பார்க்கும் போது அந்த கஷ்டம் எல்லாம் போய் விட்டது.
குழந்தையை கவனிப்பது, காலையில் நேரத்தில் எழுவது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டாலும் குழந்தை பிறந்த பிறகு இந்த மாதிரி ப்ராசஸ் நிறைய கற்றுக்கொண்டேன்.
ஆக்ரோஷமாக தாக்க முயன்ற மாணவன்! பரிதாப நிலையில் நின்ற ஆசிரியர்: வைரல் வீடியோ
குழந்தைக்கு பால் கொடுப்பது, என்னுடைய உடல்நிலை, குழந்தையின் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
இதை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்ற பயம் இருந்தாலும் எப்படியோ கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி நேரங்களில் நான் ரொம்பவே விரும்பி பார்ப்பது குழந்தையின் முகம் தான்.
குட்டி குட்டி முத்தம்
நாங்கள் இரண்டு பேரும் கண்களால் பார்ப்பது, குட்டி குட்டி முத்தம் கொடுப்பது, இரண்டு பேரும் ஒன்றாக வளரும் அந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் எடுத்துச் செல்வேன்.
ஒரு அம்மாவாக, ஒரு மகனாக நாங்கள் ஒன்றாக வளர்கிறோம், ஒன்றாக கற்றுக்கொள்கிறோம். எங்களுடைய இந்த வாழ்க்கை பயணத்தை இன்னும் நன்றாக போகனும் என்ற நம்பிக்கையை இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.
காஜலின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.
உலக அழகி போல ஜொலிக்கனுமா... இந்த ஒரே ஒரு பொருள் போதும்!