தாறுமாறாக குண்டாகி அடையாளம் தெரியாமல் போன காஜல் அகர்வால்! உடல் குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு அழகான பதில்
தாறுமாறாக குண்டாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய காஜல் அகர்வாலை பலரும் கிண்டல் செய்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த அவரின் பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடைய உடல்வாகு குறித்து பலரும் கிண்டல், கேலி செய்துள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் காஜல் தன் கணவருடன் அடிக்கடி சுற்றுல்லா சென்று இருந்தார்.
இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார். மேலும், தற்போது நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடைய உடல்வாகு குறித்து சில நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள்.
மேலும், காஜல் அகர்வால் கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்று அவர் பதிவில் கூறியிருப்பது,
எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் மிக முக்கிய எனது பணியிடத்தில் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை நான் பார்க்கிறேன்.
கேலி, கிண்டல் எல்லாம் செய்பவர்களுக்குக்காக தான் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்.
கர்ப்ப காலத்தில் நம் உடல் எடை அதிகரிப்பு உட்பட பல மாற்றங்களுக்கு உட்படுகிறது.
ஹார்மோன் மாற்றங்கள் குழந்தை வளரும் போது நம் வயிறு மற்றும் மார்பகங்கள் பெரிதாக்கும். இது நம் உடலில் பாலுக்கு தயாராகிறது.
சிலருக்கு உடல் பெரிதாகவும் நம் வாழ்க்கையில் முன்னதை விட மிகவும் மிகவும் சோர்வாகவும் இருக்கலாம். அடிக்கடி மனநிலை மாறுபடலாம்.
எதிர்மறையான மனநிலை வரவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும், பிரசவத்திற்கு பிறகு நாம் முன்பு இருந்ததை திரும்பப்பெற சிறிது காலம் ஆகும். அல்லது அதற்கு முன்பு நாம் எப்படி இருந்தோமோ அதை முழுமையாக திரும்பிப் பெற முடியாமலும் போகலாம்.
ஆனால், இந்த மாற்றங்கள் எல்லாம் இயற்கையானவை. நம் வாழ்வின் மிக அழகான அதிசயமான மற்றும் விலைமதிப்பற்ற கர்ப்ப காலத்தில் நாம் இதுகுறித்து சங்கடமாக அல்லது அழுத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
குழந்தை பிறக்கும் போது இவை அனைத்தும் மறந்து நாம் அனுபவிக்க இருக்கும் கொண்டாட்டத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை பிரசவிக்க ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க பெண்களின் உடல் ஆச்சரியமாக இருக்கிறது.
மனதில் ஏற்படும் சில உடல் மாற்றங்கள் எல்லோருக்கும் கஷ்டமாகவும் சங்கடமாகவும் தான் இருக்கும். ஆனால், அவை அனைத்தும் உங்கள் வளரும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது.
நேர்மையான வேலைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தை வளர வளர உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது பற்றி உங்கள் கணவர், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பேசுங்கள்.
உங்கள் உணர்வுகளை அடைத்து வைத்திருப்பது மிக மோசமாக உணரவைக்கும்.
வழக்கமான உடல் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். நீச்சல், நடைபயிற்சி,யோகா எல்லாம் உங்கள் மனதை தெளிவுபடுத்தும். கர்ப்ப காலத்தில் யோகா செய்வதை மருத்துவரிடம் ஆலோசனை செய்து செய்யலாம். உங்கள் உடல் எப்படி இருக்கிறது என்பதில் கவனம் செலுத்தவும்.
உங்கள் உடலுக்கும் மனதுக்கும் இடையே உள்ள இணைப்பில் அதிக கவனம் செலுத்த யோகா தேவை. அதேபோல மருத்துவரின் ஆலோசனை மற்றும் மசாஜ் செய்து மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கலாம். உங்களால் முடிந்தவரை கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்வீர்கள். உங்களது தேவைப்பட்டால் மன நல உதவியாளரையும் நாடலாம்.
இந்த உதவியை அணுகுவதில் மூலம் எந்த அவமானமும் கிடையாது. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தான் இதை செய்கிறீர்கள். யாரைப்பற்றியும், செய்யும் கேலி கிண்டல்களை பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று காஜல் அகர்வால் பதிவிட்டு இருக்கிறார். காஜல் அகர்வாலின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ஆதரவு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
