சினிமாவிலிருந்து விலகும் நடிகை காஜல் அகர்வால்! காரணம் மீண்டும் கர்ப்பமா?
நடிகர் காஜல் அகர்வால் இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதால் சினிமாவில் இருந்து விலகுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
காஜல் அகர்வால்
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு நீல் கிச்சலு என்று பெயர் வைத்துள்ளனர். அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களைப் பெற்று வரும் இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக கூறப்படுகின்றது.
முதல் குழந்தை பிறந்த பின்பு நடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியஉள்ள நிலையில், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்த இரண்டு படங்களில் நடித்து முடித்த பின்பு சினிமாவிலிருந்து விலக முடிவுஎடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் இரண்டாவதாக காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாலே என்று கூறப்படுகின்றது. ஆனால் இந்த காரணம் உண்மை இல்லை என்று அவரது மகனை கவனித்துக் கொள்வதற்காகவே சினிமாவை விட்டு செல்வதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
ஆனால் இவ்வாறான விவாதத்திற்கு மத்தியில் காஜல் அகர்வால் தரப்பு இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |