தொப்பையுடன் ஆளே மாறிய காஜல் அகர்வால்! பீச் பேபியாக மாறிய மகன்
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால்.
காஜல் அகர்வால்
டாப் நடிகைகள் லிஸ்டில் இருக்கும் போதே காஜல் அகர்வால் தன்னுடைய நீண்ட நாள் காதலரான, கெளதம் கிச்சுலு என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த காஜல், கடந்தாண்டு கர்ப்பம் தரித்ததை தொடர்ந்து, நடிக்க கமிட் ஆகி இருந்த படங்களில் இருந்து விலகினார். இறுதி பணிகளில் இருந்த படங்களில் மட்டும் நடித்து கொடுத்தார் என கூறப்பட்டது.
இதனிடையே நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நெய்ல் கிச்சிலு என பெயரிட்டுள்ளதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவித்த காஜல், அவ்வப்போது, தன்னுடைய மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள், கணவர் மற்றும் குடும்பத்துடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அடையாளம் தெரியாமல் மாறிய காணொளி
அந்த வகையில் தற்போது தன்னுடைய செல்ல மகன் நெயிலை பீச் பேபி என கூறி... மகன் முதல் முதலாக கடற்கரையில் காலடி எடுத்து வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் காஜல், அவரது கணவர், குடும்பத்தினர் என அனைவருமே உள்ளனர். குறிப்பாக இந்த வீடியோவின் ஆரம்பத்தில்... டைட் டீ ஷர்ட் அணிந்து டீ குடிப்பது போல் தோன்றும் காஜல், நன்கு உடல் எடை கூடி... தொப்பை தொந்தியோடு காணப்படுகிறார்.
இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதே நேரம் இந்த வீடியோவிலும் தன்னுடைய மகனின் முழு முகத்தை காஜல் அகர்வால் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.