கொள்ளை அழகில் ஜொலிக்கும் காஜல் அகர்வால்... இவரது அழகின் ரகசியம் இதுதானாம்
தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். ஃபோட்டோ ஷூட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதால், தன்னுடைய அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அவரின் வசீகர கண்களுக்கும், பளபளப்பான தோலும் பலரையும் பாடாய்படுத்தி வந்த நிலையில், தன்னுடைய அழகுக்கான ரகசியம் என்ன என்பதை காஜல் அகர்வால் கூறியிருக்கிறார். உடற்பயிற்சி நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதை ஒருபோதும் காஜல் தவறவிடுவதில்லை. யோகா, நடைப்பயிற்சி, மற்றும் உடலை நிலையாக வைத்திருப்பதற்கான பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால், தன்னுடைய உடல் வலிமையாகவும், நிலையான மற்றும் நெகிழ்வு தன்மையுடன் இருப்பதாக கூறியுள்ள அவர், இதனால் தனக்கு சோர்வு ஏற்படாமல் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், காயங்கள் ஏற்படுவதில்லை என்றும் காஜல் கூறியுள்ளார். ஓய்வு நேரங்களில் பயிற்சி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருந்தாலும், ஒரு சில நாட்களில் அதனை செய்ய முடியாத நிலை ஏற்படும். அத்தகைய சூழ்நிலைகளில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் உடலை நெகிழ்விக்கும் சில பயிற்சிகளை செய்வது நல்லது என காஜல் கூறியுள்ளார்.
மேலும், சாதாரண நாட்களில் கூட உடற்பயிற்சி செய்திருந்தாலும், மற்ற நேரங்களில் சில பயிற்சிகளை கூடுதலாக செய்வதில் தவறில்லை என தெரிவிக்கும் காஜல், இதனால் மெட்டபாலிசத்தின் செயல்பாடு அதிகரிக்கும் என கூறியுள்ளார். காலை உணவு காலை உணவை தவிர்ப்பது மிகவும் ஆபத்தான ஒன்று.
அதேநேரத்தில் அந்த உணவில் கூடுதலான காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. காஜல் அகர்வால் தன்னுடைய காலை டையட்டில் பழங்கள் மற்றும் கீரைகளை எடுத்துகொள்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்கள் அல்லது ஷூட்டிங் என எந்த நாளாக இருந்தாலும், தன்னுடைய உணவு முறையை, முறையாக கடைபிடிப்பதாக தெரிவித்துள்ளார்.
இயற்கை பொருட்கள் முகம் மற்றும் கை, கால்கள் மற்றும் முடி ஆரோக்கியமாக இருப்பதற்கு வீட்டில் சமையலறையில் இருக்கும் பொருட்களையே பயன்படுத்துவதாக காஜல் கூறுகிறார். பப்பாளி அல்லது தக்காளி என எந்தப் பொருட்களை சாப்பிடும்போது, அதனை கொஞ்சமாக எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் தடவிக் கொள்வேன் எனக் தெரிவித்துள்ளார். தலை முடிக்கு தேங்காய் எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துவதாகவும், காலை நேரங்களில் எண்ணெயை பயன்படுத்தி வாயை கொப்பளிப்பதாகவும் காஜல் கூறியுள்ளார்.
மேலும், முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்க, தேன் கலந்த வெங்காய ஜூஸை முகத்தில் தடவிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். கலர்ஃபுல் ஐ லைனர் (EyeLiner) கலர்ஃபுல் ஐ லைனரை பயன்படுத்தும்போது, முகத்துக்கு கம்பீரமான மற்றும் மிகவும் அழகான தோற்றத்தை கொடுக்கும். பார்ப்பதற்கு இயல்பாகவும் இருக்கும்.
பர்ப்பிள் மற்றும் பச்சைக் கலர் ஐ லைனர் பயன்படுத்துவதை காஜல் வழக்கமாக கொண்டிருக்கிறார். ஜெல் பிளஸ் (gel blush) கிரீம் அல்லது ஜெல் பிளஸை முகத்தில் தடவும்போது, முகம் பார்ப்பதற்கு மெழுகு போல் அழகாக இருக்கும். காஜல் அகர்வால் தனக்கு பிடித்த ஜெல் பிளஸை முகத்துக்கும், தாடைகளுக்கும் அப்ளை செய்வதாக கூறியுள்ளார். இவ்வாறு செய்யும்போது ஒட்டுமொத்த முகமும் கிளாமரஸான லுக்கை கொடுக்கும் என கூறியுள்ளார்.
அழகுப்படுத்திக்கொள்ளுங்கள்
அழகுப்படுத்திக்கொள்வது ஒருவருக்குள் நம்பிக்கையை அதிகப்படுத்தும் என காஜல் தெரிவிதுள்ளார். இதனால், தன்னை அழகுப்படுத்திக்கொள்வதை விரும்பி செய்வதாகவும், வெளியில் செல்லும்போது சிவப்பு கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். முகத்தில் இருக்கும் அனைத்து பாகங்களுக்கும் கிரீம் அப்ளை செய்யும்போதுதான் முகம் பளிச் சென்று இருக்கும் எனவும் காஜல் தெரிவித்துள்ளார்.