பாகுபலி கட்டப்பா பாணியில் குழந்தையை வைத்து காஜல் அகர்வால் செய்த செயல்! வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த காஜல் அகர்வால், 2020இல் கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில், இவர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திய காஜல் அகர்வால் முழு நேரமும் தனது குழந்தையோடு நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி, தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்காக அவ்வப்போது புதுவிதமான புகைப்படங்கள் மற்றும் குழந்தையோடு இருக்கும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு வருவார்.
மகனின் கட்டப்பா புகைப்படம்
இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாகுபலி கட்டப்பாவை போல் தனது தலை மேல் குழந்தையின் பாதத்தை வைத்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பாகுபலி பாடலுடன் வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தையும், இயக்குனர் ராஜமெளலிக்கு டெடிகேட் செய்வதாகவும் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகவும் பரவி வருகிறது.