Kadi Jokes: சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்கவைக்க முத்தான ஜோக்ஸ்
Stress
By Pavi
நண்பர்கள் ஒன்றாக இணைந்தாலே அந்த இடத்தில் சந்தோசத்திற்கு குறைவிருக்காது. அப்படி ஒருவர் மற்றவரை கேலி செய்து பேசும்போது அங்கு ஒரு சத்தமான சிரிப்பு வரும்.
நாம் அதிகளவில் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தால் உடலில் எந்த நோயும் இருக்காது. தற்போது எல்லோரும் பொழுது போக்க பயன்படுத்துவது தொபைல் தான்.
அதனால் தான் இணையத்தில் உங்களை சிரிக்க வைக்க இப்படி ஒரு திட்டம். சில கேள்விகளுக்கு முட்டாள் தனமாகவும் புத்திசாலித்தனமாகவும் கூறுவது தான் கடி ஜோக்ஸ்.
இதற்கு சிரிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் நண்பா்களை கடுப்பேத்தவும் இந்த கடி ஜோக்ஸ் பெரிதும் உதவும், இந்த பதிவில் வாங்க கடி ஜோக்ஸ் படிக்கலாம். நண்பர்களை கடுப்பேத்தலாம்.
கடி ஜோக்ஸ்
எறும்புக்கும் கரும்புக்கும் என்ன வித்தியாசம்..? | நாம கரும்பை கடிக்குறோம். எறும்பு நம்மள கடிக்குது. |
ஒருத்தர் மோதிரத்தை தன்னோட கால் விரல்ல போட்டுருந்தாராம் ஏன்..? | ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம். |
கொக்கு எப்போ ஒத்த கால்ல நிக்கும்..? | அது ஒத்த கால எப்போ தூக்குதோ அப்ப தான். |
நாம் ஏன் தண்ணி தெளிச்சு கோலம் போடுறோம் தெரியுமா..? | கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சுடும்ல. |
ஒரு பையன் தன்னோட அப்பா பெயரை எழுதி கொண்டுபோய் ஃப்ரிட்ஜ் குள்ள வைச்சானாம். ஏன்..? | ஏன்னா அவங்க அப்பா பெயர் கெட்டுற கூடாதாம். |
எலுமிச்சை பழம் ஆணா ? பெண்ணா? | ஆணு தான்! ஏன்னா அத புழுஞ்சா சார்(Sir) வருதுல! |
எல்ல Stage-லயும் Dance ஆட முடியும்! ஆனா Dance ஆட முடியாத Stage என்ன Stage..? | வேற என்ன “Coma” Stage தான். |
ஒரு அரக்கன் அரக்கிய வச்சி கோவில் பூட்ட திறந்தான்! ஆனா திறக்க முடியல ஏன்..? | அரக்கி(Key) வச்சி பூட்டு திறக்க முடியாதுல! முழுக் ” கீயூம்” வேணும்ல. |
Circle அறிவாளியா ? இல்ல Square அறிவாளியா..? | Square தான் ஏன்னா அதுக்கு தா நாலு மூளை இருக்குள்ள. |
ஒருத்தன் Maths Exam எழுதும் பொழுது Dance ஆடிட்டே எழுதுனானாம் ஏன்..? | ஏன்னா Maths-ல தான் Steps-க்கு லாம் Mark இருக்கே. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
வெற்றியின் ரகசியம்: இந்த 7 விடயங்களை தவறியும் யாரிடமும் சொல்லாதீங்க... 52 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US