Kadi Jokes: மந்தமான மனநிலையை மாற்றி வாய்விட்டு சிரிக்க தயாரா?
வாழ்க்கைக்கு தேவையான பணத்தை தேடி மனிதன் எவ்வளவு ஓடினாலும் அவன் சிரிப்பதில் தான் அன்றைய நாள் அவனுக்கு முழுமை பெறும். மனித வாழ்க்கையில் சிரிப்பு தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் அதிகளவில் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தால் உடலில் எந்த நோயும் இருக்காது. இதற்காக தான் தற்போது இணையத்தில் கடி ஜோக்ஸ் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
சில கேள்விகளுக்கு முட்டாள் தனமாகவும் புத்திசாலித்தனமாகவும் கூறுவது தான் கடி ஜோக்ஸ். நண்பர்களுடன் நேரம் செலவிடும் போது இவ்வாறான கடி ஜோக்ஸ் சொல்லி அவர்களை கடுப்பேத்தி சிரிக்க வைப்பதில் ஒரு ஆனந்தம். சிரிக்க தயாரா?
கடி ஜோக்ஸ்
1. நண்பன் 1: கடல் தண்ணீ ஏன் உப்பா இருக்கு? | நண்பன் 2: இனிப்பா இருந்தா ஈ மொய்க்கும்ல அதான். |
2. நண்பன் 1: Fanக்கும் பேன் க்கும் என்ன வித்தியாசம்? | நண்பன் 2: தெரியலயே நண்பன் 1: இரண்டுமே தலைக்கு மேல தான சுத்திக்கிட்டே இருக்கு! |
3. நண்பன் 1: ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் 26, அதுல A ஓடி போச்சுனா மீதம் எத்தனை எழுத்து? | நண்பன் 2: A போச்சுனா மீதம் 25 தான? நண்பன் 1: அதான் இல்ல A O D இந்த மூணு எழுத்தும் போச்சுனா 23 தான்! |
4. வாத்தியார்: கும்பகர்ணன் மாத கணக்கில் தூங்கினான் அது என்ன காலம்? | மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார். |
5. வாத்தியார்: எல்லா Letter-ம் வர மாதிரி ஒரு Word சொல்லுங்க? | மாணவன்: Post Box சார். |
6. நண்பன் 1: ரொம்ப காஸ்ட்லியான கிழமை எது? | நண்பன் 2: வெள்ளிக்கிழமை. |
7. டாக்டர்: உங்க Kidney Fail ஆகிடிச்சி! | நோயாளி: நான் என்னோட Kidney-ய படிக்க வைக்கவே இல்லையே அப்பறம் எப்படி டாக்டர் அது Fail ஆகும். |
8. வாத்தியார்: ஏன்டா நாய் படம் வரைந்து விட்டு வாய் மட்டும் வரையாமல் வச்சி இருக்க? | மாணவன்: அது வாயில்லா பிராணி சார். |
9. நண்பன் 1: பன்னுல தண்ணீர் போனா என்னாகும்? | நண்பன் 2: “பன்னீர்” ஆகும். |
10. நண்பன் 1: ஒரு பாம்பு ரொம்ப நேரம் அழுதுகிட்டு இருந்துச்சாம் ஏன்? | நண்பன் 2: ஏன்னா அது எடுத்த படம் FLOP ஆயிடுச்சாம். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |