காதல் பட நடிகை சந்தியா இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா? எதிர்பாராத எண்ட்ரி
காதல் பட நடிகையான சந்தியா தற்போது சின்னத்திரை சீரியல் ஒன்றில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
காதல் சந்தியா
தமிழ் சினிமாவின் நடித்து புகழ்பெற்ற நடிகை சந்தியா, காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் காதல் என்ற படத்தில் அறிமுகமான சந்தியா அதிலிருந்து காதல் சந்தியா என்று அழைக்கப்பட்டார். ஓரிரு படங்களில் நடித்து பிரபலமான இவர், பின்பு வாய்ப்பு குறைந்த நிலையில் நடிப்பிலிருந்து விலகினார்.
பொதுவாக சினிமாவில் நடிப்பவர்கள் சீரியலில் நடிப்பது இயல்பு என்றாலும், கதாநாயகியாக நடித்தவர்கள் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பது மிகவும் அரிதே.
சீரியலுக்கு வந்த காதல் சந்தியா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் சந்தியா நடிக்கின்றார். நீண்ட இடைவேளைக்கு பின்பு சந்தியா நடிக்க வந்துள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குறித்த சீரியலில் பரமேஷ்வரி ரெட்டி, வெண்பா, தீபக் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், காதலித்தவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாமல் சூழல் காரணமாக இருவர் தனது ஜோடிகளை மாற்றி திருமணம் செய்துகொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.
அந்தத் திருமணத்துக்குப் பின்பு, வெறுப்புணர்வில் இருந்து மெல்ல மெல்ல காதலை நோக்கி நகரும் கதையாக இருக்கின்றது.
இந்தத் தொடரில் சிறப்புத் தோற்றத்தில் காதல் சந்தியா நடிக்கவுள்ளார். குளத்தில் இருந்து சாமி சிலை ஒன்றினை எடுத்து வருவது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |