அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய காதல் ஓவியம் கண்ணன்: 41 ஆண்டுகளுக்கு பின் நடிக்கத் தயார்
பாரதிராஜாவின் இயக்கத்தில் காதல் ஓவியம் திரைப்படத்தில் நடித்த நடிகர் கண்ணன் தற்போதைய நிலைமை குறித்த செய்திகள் வைரலாகி வருகின்றது.
காதல் ஓவியம் கண்ணன்
ஆரம்ப கால சினிமாவில் எத்தனையோ நடிகர், நடிகைகள் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தற்போது ஓய்வெடுத்து வருகிறார்கள்.
அதில் இன்னும் சிலர் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி மக்களை கவர்ந்த நடிகர் தன் தோல்வி படங்களால் சினிமா வாழ்க்கை விட்டு விலகி நடிக்க தயாராகி வரும் நடிகர் தான் காதல் ஓவியம் கண்ணன்.
இவர் 1982ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் காதல் ஓவியம் திரைப்படம் படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் கண் தெரியாதவனாக நடித்து அசத்தியிருந்தார் ஆனால் அந்த திரைப்படம் பெரும் தோல்வியடைந்தது. ஆனால் இதில் வரும் பாடல்கள் எல்லாம் இன்று வரைக்கும் மனதில் பதிந்து இருக்கும்.
இந்த திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்ததால் அவர் இனிமா வேண்டாம் என்று விலகிவிட்டார்.
தற்போதைய நிலைமை
காதல் ஓவியம் கண்ணன் எங்கே என்று பலரும் தேடிக் கொண்டிருந்த வேளையில், யூடியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர். காதல் ஓவியம் திரைப்படம் தோல்வியைடந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இவருக்கு தற்போது 60 வயதாகின்ற போதிலும் இன்னும் இளமையாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்.
மேலும், தான் 40 வருடங்களுக்கு முன் காதல் ஓவியம் படத்தில் நடித்தபோது அழகான தோற்றம் உள்ளவராக இருந்தேன் என்பதில் சந்தேகமில்லை. எனினும், கண் பார்வையற்றவராக நடிக்க வேண்டி இருந்ததால் பொலிவில்லாத ஒரு தோற்றத்துடன் அந்தப் படத்தில் நடித்தேன்.
அதில், கண் முழியை மேல் நோக்கியவண்ணம் வைத்திருந்ததால் பார்க்க சிறிது அச்சம் ஏற்படுத்தும் விதமாக இருந்ததே அதனால் தான் அந்தப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது என சொல்லியிருக்கிறார். மேலும், தற்போது நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிக்கத் தயார் என்றும் சொல்லியிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |