கடன் தொல்லையை ஒரு பரிகாரத்தில் விரட்டணுமா? கொள்ளு எடுத்து பண்ணுங்க- உடனே பலன்
நம்மிள் பலருக்கும் கடன் பிரச்சினை அதிகமாகி வருகிறது. கெட்ட நேரம் இருந்தால் ஒருவர் அதிகமாக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
கடன் வாங்கியவுடன் சிலர் கொடுத்து விடுவார்கள், மாறாக இன்னும் சிலர் கடன் வாங்கியதில் இருந்து மேலும் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். அப்படி அனுபவிக்கும் பொழுது இறைவன் நமக்கு கைக் கொடுப்பார்.
வாங்கிய கடனை அடைப்பதற்குள் நமக்கு வரும் டென்ஷன், பிரஷர், பாதி வியாதிகளை உடலில் ஏற்படும். இன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி என்பதால் ஒரு பொருளை தலையை சுற்றி போட்டால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்பது நம்பிக்கை.
சங்கடஹர சதுர்த்தி நாளில் பிள்ளையாரை கும்பிட்டு எமகண்ட நேரம் 3 – 4:30 மணி நேரத்தில் பரிகாரம் செய்தால், இதுவரையில் உங்களை ஆட்டிப்படைத்த கடன்கள் அனைத்தும் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், என்ன பரிகாரம் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பரிகாரம்
எமகண்ட நேரம் 3- 4.30 வரையிலான காலப்பகுதியில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து, அதனை நமது தலையை 9 முறை சுற்றி அந்த கொள்ளு பருப்பை காக்கை குருவிகளுக்கு இரையாக போட வேண்டும்.
இந்த பரிகாரத்தை விநாயகர் கோவிலில் நின்று செய்தால் இன்னும் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். இந்த நேரத்தில் விநாயகர் கோவில் திறந்திருந்தால் கோயில் உள்ளே சென்றும் செய்யலாம். அத்துடன் அரச மரத்தடி பிள்ளையார் இருந்தால் கடன் பிரச்சினைகள் உடனே தீர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
அவருக்கு முன்பு நின்று இந்த பரிகாரத்தை செய்து விட்டு, மரத்தடியில் கொள்ளு தூவி விட்டால் உங்களின் பெரிய கடன்கள் முடிவுக்கு வரும். சங்கடஹர சதுர்த்தி அன்று 1 கிலோ கொள்ளு வாங்கி விநாயகர் கோவிலில் இருக்கும் அர்ச்சகருக்கு தானமாக கொடுத்தால் கடன் சுமை கணிசமாக குறையும்.
மதியம் எமகண்ட நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, வெள்ளிக்கிழமை மாலை கோவிலில் நடக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்வது சிறந்தது. பிள்ளையாருக்கு கட்டாயம் சிதறு தேங்காய் உடைக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
