காரச்சட்டினி இப்படியும் செய்யலாமா? இந்த முறையை கட்டாயம் செய்து பாருங்க!
காலையில் நாம் உணவு செய்வது வழக்கம். இந்த உணவிற்கு காராரமாக எதாவது செய்வது முக்கியமாகும். அந்த வகையில் காலையில் மிகவும் ஆரோக்கியமாகும் ஈஸியாகவும் செய்யக்கூடிய கார சட்னிஎப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
காரச்சட்டினியில் பல வகை உண்டு.இதை தேங்காய் வைத்தும் சிலர் செய்வர் சிலர் வேறு விதமாகவும் செய்வார்கள். ஆனால் இதை எப்படி செய்தாலும் இந்த பதிவில் முற்று முழுதாக வித்தியாசமாக செய்யப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 3
- பூண்டு - 8 பல்
- வர மிளகாய் - 4
- காஷ்மீரி மிளகாய் - 3
- புளி - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- வெல்லம் - 2 சிறிய துண்டு
- தாளிக்க தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
செய்யும் முறை
முதலில் ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், புளி, வெல்லம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இதை அரைத்த சட்டினியுடன் சேர்த்து மிக்ஸ் செய்து மூடி வைத்து பரிமாறினால் சுவையான கார சட்டினி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |