இலங்கையில் அழிந்து வரும் பாரம்பரிய கலை... நிலைநாட்ட துடிக்கும் மக்கள்!
இலங்கையில் மலையக மக்களின் தனித்துவத்தை எடுத்துகாட்டும் கூத்துக்களில் காமன் கூத்து மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய காலத்தில் இருக்கும் இளைஞர்கள் மறந்து வரும் ஒரு கலையும் இது தான்.
இந்தக் கூத்து முப்பெரும் கூத்துக்களான காமன்கூத்து, அருச்சுணன் தபசு, பொன்னர் சங்கர் என்பவற்றில் இந்த காமன் கூத்து சிறப்பானது. இதனை காமன் பண்டிகைாயகவும் மலையக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் பண்டிக்கையானது மலையக மக்களின் இறை நம்பிக்கை கொண்ட பண்டிகையாகவும் பார்க்கப்படுகிறது. இந்தப் பண்டிகையில் மூத்த காமன் கூத்து கலைஞர்கள் தலைமுறை தலைமுறையாக இசைத்து பாடப்படும் சில பாடல்களும் அதற்கு ஏற்றாற்போல தப்பிசையும் வித்தியாசமான கலையம்சமாக இருக்கிறது.
இந்தக் காமன் கூத்து பற்றிய முழுமையான, விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ள கீழுள்ள காணொளியை முழுமையான காணுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |